×

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி; 609 பேர் சுயேட்சை.. விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிகளில் எத்தனை பேர் போட்டி என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில், 609 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். அதிமுக சார்பில் 34 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். திமுக – 22, பாரதிய ஜனதா தளம் கட்சி சார்பில் 23 வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சி – 39, பாமக – 10 வேட்பாளர்கள், தேமுதிக சார்பில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

The post மக்களவை தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி; 609 பேர் சுயேட்சை.. விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Tamil Nadu ,Election Commission ,Delhi ,Lok Sabha elections ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...